அர்ஜென்டினா பெண் துணை அதிபரை கொல்ல முயற்சி: துப்பாக்கி பழுதானதால் உயிர் தப்பினார்

128 0

அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபராக இருந்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர். மூத்த பெண் அரசியல் தலைவரான இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 2 முறை அர்ஜென்டினா அதிபராக பதவி வகித்துள்ளார்.

இந்த பதவி காலத்தில் அவர் அரசு நிதியை கையாடல் செய்ததாக ஊழல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமானால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையோடு, அரசியலில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனினும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.