எதிர்வரும் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பில் மேற்கொள்ளப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான மனுவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான மொன்டேகு சரத்சந்தர தாக்கல் செய்திருந்தார்.