இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக 6.3 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள உலக உணவுதிட்டம்.6. 7 மில்லியன் மக்கள் போதியளவு அளவு உணவை உண்ணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
உலக உணவுதிட்டம் உணவு விவசாய ஸ்தாபனம் ஆகியவை இணைந்து உணவு பாதுகாப்பு மதிப்பீட்டின் போது இது தெரியவந்துள்ளது.
உடனடி நடவடிக்கைகள் இல்லாவிட்டால் இந்த நிலை மேலும் மோசமடையலாம் என உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.
நிபந்தனையற்ற உணவுஉதவி பாடசாலையில் உணவு வழங்குதல் ஊட்டச்சத்து ஆதரவு போன்றவற்றின் மூலம் 3.4 மில்லியன் மக்களை சென்றடைய திட்டமிட்டுள்ளதாக உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 64.3 வீதமாக காணப்பட்டது அதிகளவில் பணம்அச்சடிக்கப்பட்டமையினால் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக உணவுப்பொருட்களின் விலைகள் 93.7 வீதத்தினால் அதிகரித்துள்ளன.
இலங்கையால் போதியளவு அரிசி மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாவிட்டால் ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் அதிகரிக்கலாம் என உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.