சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கை – ஜனாதிபதி தெரிவித்துள்ளது என்ன?

192 0

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை நமது சக குடிமக்களிற்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான எமது உறுதிப்பாட்டிற்கான ஒரு சான்றாகும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை தற்போது காணப்படும் வெளிஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய சர்வதேச  நாணயநிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி சகாக்களிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொள்ள எங்களிற்கு உதவுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய குழுவினர் இலங்கையின் நிதியமைச்சு மத்திய வங்கி ஆகியவற்றிற்கு இந்த உடன்படிக்கையை மிகவும் குறுகிய காலத்தில் சாத்தியமாக்கிய கடினமான முயற்சிகள் அர்ப்பணிப்பிற்காக நன்றி தெரிவிக்கின்றேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த திட்டம் என்பது இலங்கைதற்போது எதிர்கொண்டுள்ள சவால்களிற்கு முழுமையான தீர்வை காணும் நோக்கத்தை கொண்டது என  நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்துடான உடன்படிக்கை சாத்தியமாகியுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் இலங்கை கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது  என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை கடன்வழங்கிய நாடுகளிற்கு பொருளாதார அபிவிருத்தி சர்வதேச நாணயநிதியத்துடன்  ஏற்றுக்கொள்ளப்பட்ட சீர்திருத்திட்டம் ஆகியவை குறித்து தெளிவுபடுத்தவுள்ளது.