ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அலுவலகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பில் கட்சியின் கேகாலை அமைப்பாளர் லக்ஸ்மன் திசநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்சி அலுவலகத்தில் இன்று காலை துப்பாக்கி சூட்டு காயங்களுடன் 36 வயது பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
கேகாலை ஹபுதுவலயை சேர்ந்த பெண் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரiணைகளின் போது கட்சியின் தொகுதி அமைப்பாளர் அந்த பெண்ணை அவரது வீட்டிலிருந்து அழைத்துவந்தமை தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து மேலதிக விசாரைணகளிற்காக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.