ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (01) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ள நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நாளை (02) நடைபெறும்.
இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் VAT 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் போதே VAT ஐ அதிகரிக்க ஜனாதிபதி முன்மொழிந்தார்.
இதன்படி வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் என்ற வகையில் கையொப்பமிட்டுள்ளார்.