நிலவும் மழையுடனான காலநிலையுடன் பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகளின் நீர் மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
களு கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலங்களிலும் சிறிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, கொழும்பு, காலி, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அந்த மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்