கடைசி கைப்பிடி மீன்கள்- நெருக்கடி இலங்கையில் இன்னமும் அதிகமானவர்களை வறுமைக்குள் தள்ளுகின்றது

188 0

49வயதான நிலாந்திகுணசேகர தனது நீட்டிய உள்ளங்கைகளில் தனது குடும்பத்தின் கடைசி கைப்பிடி நெத்திலியை வைத்திருக்கின்றார்,- தசாப்தகாலத்தில் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை இது நினைவுபடுத்துகின்றது.

வாழ்க்கை தரத்தில் ஏற்பட்டுள்ள பேரழிகரமான வீழ்ச்சியுடன் போராடும் மில்லியன் கணக்கான இலங்கையர்களில் இவரும் ஒருவர்.

அவர்கள் உணவை கைவிடவேண்டிய மருந்துகளை கவனமாக பயன்படுத்தவும் வேண்டிய நிலையில் உள்ளனர்,சமையல் எரிவாயுவிற்கு பதில் விறகுகளை பயன்படுத்தவேண்டிய நிலையிலும் உள்ளனர்.

தற்போது மீன் என்பது எங்களிற்கு அப்பாற்பட்ட விடயம் கோழி இறைச்சியும் அப்படித்தான் என தெரிவிக்கும் குணசேகர இரண்டு வாரங்களாக எங்களால இறைச்சியையோ மீனையோ கொள்வனவு செய்ய முடியவில்லை- இதுவே எங்களது கடைசி புரோட்டின் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

கொவிட் பெருந்தொற்று அதிகரிக்கும் எண்ணெய் விலைகள் முன்னைய அரசாங்கங்கள் பொருளாதாரத்தை தவறாக கையாண்டமை போன்றவற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை 1948 பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தனது மிகவும் மோசமான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது.

மிக அதிகளவு பணவீக்கம் நீண்டுவிரியும் எரிபொருள் வரிசைகள் மருந்து உணவு போன்றவற்றிற்கான பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக பல இலங்கையர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்,அதேவேளை பல மாத கால வீதி ஆர்ப்பாட்டங்கள் ஜூலையில் அப்போதைய ஜனாதிபதியை பதவி விலகச்செய்தன.

22 மில்லியன் மக்கள் சனத்தொகையில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் போதிய ஊட்டச்சத்து மிக்க உணவை பெறுவதற்கு பெரும் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர் என ஐநா தெரிவிக்கின்றது.

சில மாதங்களிற்கு முன்னர் அவரது வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் சமையல் எரிவாயு சிலிண்டரையும் குக்கரையும் களவாடிச்சென்றுள்ளதால் தங்;களால் எரிவாயு சிலிண்டரையோ குக்கரையோ வாங்க முடியாது என குணசேகர தெரிவித்தார்.

இதன் காரணமாக நாங்கள் தற்போது விறகை பயன்படுத்தி சமைக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இயலாமை அதிகரிப்பதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பலமில்லியன் டொலர் உதவிக்காக சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதுடன் இந்தியா ஜப்பான் அமெரிக்கா போன்ற முக்கிய சகாக்களின் உதவியையும் நாடுகின்றது.

ஆனால் பாரிய நிதி உதவி கிடைப்பதற்கு பல மாதங்களாகும்,கடும் சிக்கன நடவடிக்கைகளிற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன,இதன் காரணமாக அனேக இலங்கையர்களின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை

.

நான் காசை மிச்சப்படுத்துவதற்காக தற்போது பொதுக்கிணற்றில்குளிக்கின்றேன் என தெரிவிக்கின்றார் 31 வயது முச்சக்கரவண்டி சாரதி சிவராஜா சஞ்ஜீவன்.உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் மின்சார நீர்விநியோக கட்டணங்களை செலுத்துவது கடினமாகியுள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.

தட்டுப்பாடுகள்  தொடர்கின்றன

 

குறைவடைந்தஅந்நிய செலாவணி கையிருப்புகள் எரிபொருள் விநியோகங்களை பாதித்துள்ளதால் நீண்ட வரிசைகள் -சில சமயம் பல நாட்களிற்கு நீடிப்பவை இந்த வருடம் நாளாந்த விடயமாகிவிட்டன.

தட்டுப்பாடுகள் காரணமாக விறகுகளிற்கான தேவை அதிகரித்துள்ளது.

நெருக்கடி காரணமாக கட்டுமான தொழில் வாய்;ப்பை இழந்துவிட்டதால் தனது தந்தையுடன் இணைந்து மரங்களை வெட்டி விற்பதாக தெரிவித்தார் கிருசான் தர்சன.

தற்போது சில கோப்பை தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளுடன் நாளாந்த வாழ்க்கயை ஓட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவர் விறகுக்காக மரம் வெட்டுவது கடினமான வேலை என்கின்றார்,ஆனால் வேலை எதுவும் இல்லாத போது என்ன செய்வது எனவும் தெரிவிக்கின்றார்.

உடல்பாதிப்பு உள்ளவர்களிற்கு தற்போதைய நிலைமை மிகவும் நெருக்கடியானதாக காணப்படுகின்றது

அரசமருத்துவமனைகளில் மருந்துகள் முடிந்துவிட்டன இதனால் அவர்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்குமாறு  சொல்கின்றனர்,ஆனால் எங்களிடம் பணம் இல்லை என்கின்றார் கிருசானின் 60 வயது தாய் கமகே ரூபாவதி.

அவர் ஆஸ்த்துமா கொலஸ்டிரோல் மூட்டுவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்,ஆனால் அவரிடம் மூன்று நாட்களிற்கான மருந்துகளே உள்ளன.

தான் சுவாசிப்பதற்கு பயன்படுத்தும் இன்ஹேலரை காண்பித்து இது முடிந்ததும் நான் என்ன செய்வது என அவர் கண்ணீருடன் கேட்கின்றார் .

சிறுவர்களும் துன்புறுகின்றனர்

பெருந்தொற்றினால் ஏற்கனவே கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தொற்றினை தொடர்ந்து உருவான பொருளாதார நெருக்கடியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களே- பெற்றோர்கள் பொருட்களை பெறுவதற்காக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,அதிகாரிகள் அதிகரிக்கும் போசாக்கின்மை குறித்து கவலையடைந்துள்ளனர்.

எங்கள் பிள்ளைகளின் கல்வியே எங்களின் முக்கிய கரிசனை என்கின்றார் குணசேகர ஆனால் எங்களால் கொப்பிகளை கூட வாங்க முடியவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

தனக்கு தொழில்வழங்கியவர்களிடம் அவற்றிற்காக எனது கணவர் மன்றாடினார் என்கின்றார் அவர்.

சில பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைகளிற்கு அனுப்புவதற்கான பணத்திற்கு பெரும் சிரமப்படுகின்றனர் ஏனையவர்களால் அவர்களிற்கு ஐஸ்கிறீம்  இனிப்புகள் போன்றவற்றை கூட வாங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

ஓசாத பெர்ணாண்டோ தனது மாமா மூங்கில் சொப்பிங் பாக்குகளை பயன்படுத்தி செய்த பட்டத்துடன் விளையாடுகின்றான்.கடந்த மாதம் அவனது பிறந்த நாளிற்காக பரிசுப்பொருளை அவனது பெற்றோரால் வாங்க முடியவில்லை.

எனக்கு ரேசிங் கார் என்றால் விரும்பம் என தெரிவிக்கும் 11 வயது சிறுவன் அடுத்த பிறந்த நாளிற்காவது அது கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றான்.

 

ரொய்ட்டர்