தமிழகத்தில் பலமான எதிர்க்கட்சியாக தி.மு.க. உள்ளது

440 0

201607161008390066_Strong-opposition-DMK-in-TN-Stalin-speech-in-Coimbatore_SECVPFதமிழகத்தில் பலமான எதிர்க்கட்சியாக தி.மு.க. உள்ளது என்று கோவையில் பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.  கோவையில் பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நேற்று இரவு நடந்தது.இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-தமிழகத்தில் இன்றைய கால கட்டத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இல்லை. ஆனால் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களை தட்டி கேட்கும் நிலையில் உள்ளது.

வழக்கமாக சட்டமன்றத்தில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி மற்றும் சில எதிர்க்கட்சிகள் இருக்கும். ஆனால் இன்று சட்டமன்றத்தில் ஒரே எதிர்க்கட்சி தி.மு.க. தான். அதுவும் வலுவான எதிர்கட்சியாக உள்ளது. சட்டமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு இணையாக தி.மு.க. உறுப்பினர்களும் நிரம்பி இருக்கிறார்கள். காரணம் மக்கள் இந்த இயக்கத்தின் மீதும் தலைவர் கலைஞர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையோடு இன்று நீங்களும் தி.மு.க.வில் இணைந்துள்ளீர்கள். உங்களை எப்போதும் தி.மு.க கைவிடாது.

ஒரு தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சியில் தான் பலர் இணையும் விழா நடக்கும். ஆனால் இன்று எதிர்கட்சியாக உள்ள தி.மு.க.வில் பலரும் நாள்தோறும் இணைந்து வருகிறார்கள். அதற்கு காரணம் தி.மு.க பலமான இயக்கமாக உள்ளது.அனைத்து தரப்பு மக்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காகவும் உழைக்கும் கட்சி தி.மு.க. தான்.

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 மாதத்தில் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அன்றாடம் நடக்கிறது. தமிழக சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மேயரை மக்களே தேர்வு செய்யும் முறை இருந்தது. தோல்வி பயம் காரணமாக இந்த நடைமுறையை மாற்றி விட்டார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் நீங்கள் அனைவரும் இணைந்து வெற்றிக்காக பணியாற்ற வேண்டும்.