ராஜபக்சாக்கள் நாட்டிற்கு செய்தவற்றால் நான் அவர்களை வெறுக்கின்றேன்

124 0

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிபேரிடர் நிலைமை இரண்டு ராஜபக்சாக்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களின் விளைவு என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ராஜபக்சாக்களை ஆட்சியிலிருந்து அகற்றி அரகலய் மெய்சிலிர்க்க வைத்தது  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் அமைப்புமுறை வீழ்ச்சியடைந்துள்ள போது வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ள போது நீங்கள் எப்படி நிலைமையை மாற்றுவீர்கள் என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சமூக அரசியல் எழுச்சியால் மாத்திரமே அதனை மாற்றமுடியும் – புரட்சியே வழி என குறிப்பிட்டுள்ளார்.

மிகமோசமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை சந்தித்த மாற்றங்கள் குறித்து இந்து நாளிதழிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு ராஜபக்சக்களின் ஆட்சி காரணமாக நாடு அந்த நிலையை அடைந்திருந்தது,மோசமான வெறுக்கத்தக்க அனைத்தும் அதிகாரத்தில் ஸ்திரப்படுத்தப்பட்டிருந்தது, எனதெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களது கூட்டாளிகளால்தான்  நாம் இன்று வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டோம் என இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த விடுதலைப்புலிகளின் கொலை முயற்சிலியிருந்து தப்பிய அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ராஜபக்சக்காளின் ஆதரவை நம்பியுள்ள ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எவ்வாறு செயற்படுகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சமூக நலன்புரி மாதிரியுடன் தாராளவாத நிதியியலை  கலக்கும் முறைக்கும் அதிகாரிகள் செல்லவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தை அடிப்படையாக கொண்ட கடினமான முடிவுகளை இலங்கை எடுக்கவேண்டிய நிலை காணப்படலாம் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி குறிப்பாக வெளிஉதவி குறித்த பேச்சுவார்த்தைகளின் போது இந்த நிலை காணப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசாங்கம் ஒரு நாட்டை நோக்கி அதிகமாக நகர்ந்தது என தெரிவித்துள்ள அவர் அணிசேரா மாதிரியை  இலங்கை பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மகிழ்ச்சியடையாததால் இந்தியா  விலகியிருந்து காத்திருந்திருக்க கூடிய நிலை காணப்பட்ட போதிலும் இந்தியா எங்களிற்கு உதவ முன்வந்தது உதவிகளை வழங்கியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்கள் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக உள்ளன,அதிகாரிகள் – ரணில் பொதுஜனபெரமுன அதிகாரிகள் இல்லை,மாறாக ரணிலினால் தலைமை வகிக்கப்படும் அதிகாரிகள் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளும் நாட்டின் தேசிய விவகாரங்களிற்கு தீர்வை கண்டால் வரலாற்றின் கடந்த காலம் ராஜபக்சாக்களை உரிய இடத்தில் வைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால்தான் அரகலய சிறப்பானதாகவும் அசாதாரணமானதாகவும் காணப்பட்டது என கூறலாம்,

ராஜபக்சாக்கள் என்னை மிகவும் பயங்கரமான முறைகள் – மிகவும் இழிவான விதத்தில் துன்புறுத்தினார்கள் – மகிந்தவும் பசிலும் – எப்படியிருந்தாலும் இந்த விடயங்கள் எனது தனிப்பட்ட அரசியல் முன்னுரிமைகளை பாதிப்பதில்லை,அவர்கள் நாட்டிற்கு செய்த விடயங்களிற்காக நான் அவர்களை வெறுக்கின்றேன்.

இதன் காரணமாக அரகலயவால் அவர்களை அமைதியான முறையில் துரத்த முடிந்தமை குறித்து நான் நிம்மதியடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.