மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும்- கனிமொழி

524 0

201607161026020993_Kanimozhi-urges-Kamaraj-name-to-be-called-the-federal-lunch_SECVPFநாடார் மகாஜன சங்கம் சார்பாக காமராஜின் 114-வது பிறந்த நாள் விழா விருதுநகரில் நடந்தது.கூட்டத்தில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-“பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்றும் பாசமும் வைத்திருப்பவர் தலைவர் கலைஞர். அதனால்தான் பெருந்தலைவரின் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார்.அதையும் வெறும் அரசாணையாக போட்டால் அடுத்து வரும் அரசுகளால் மாற்றப்படக்கூடுமோ என்று எண்ணி… சட்டமாக இயற்றி யாரும் மாற்ற இயலா வண்ணம் வைத்திருக்கிறார்.கலைஞர் முதல்வராக இருந்த போது பல வி‌ஷயங்களில் பெருந்தலைவரின் அறிவுரையை கேட்டு செயல் பட்டவர். இங்கே மேடையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அமர்ந்திருக்கிறார். இங்கே உள்ள அனைவர் சார்பாகவும் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

மத்திய அரசாங்கத்தின் பள்ளிகளிலும் மதிய சத்துணவுத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. நாடு முழுவதும் அந்தத் திட்டத்துக்கு பெருந்தலைவர் பெயரை வைக்க வேண்டும். அது அவருக்கு நாம் செய்யும் சிறந்த அங்கீகாரமாக இருக்கும். அவர் இந்த நாட்டுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். மத்திய அரசு மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டுவது அவருக்கு பெருமை தரக்கூடியதாக இருக்கும், எனவே அத்தனை பேரின் சார்பிலும் மத்திய அமைச்சருக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

இன்று தமிழ்நாட்டில் இருந்து பலர் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வேலை பார்க்கிறார்கள் என்றால் அதில் காமராஜருக்கு பெரிய பங்கு இருக்கிறது. பெருந்தலைவரின் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி அன்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். அதிலும், பெண்களுக்கு மிகச்சிறந்த கல்வி வாய்ப்புகளை வழங்குவோம் என்ற உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.