அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

118 0

ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளையும் அதன் நிர்வாகத்தையும், விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் அதன் நிர்வாகத்தின் 49 சதவீத பங்குகளையும் முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கான விலைமனுக்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பது தொடர்பாக அமைச்சில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “தற்போது ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் லாபம் ஈட்டுகிறது. எனவே, நாங்கள் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன பங்குகள் மற்றும் அதன் நிர்வாகத்தில் 51 சதவீததை நாம் வைத்துக்கொண்டு, முதலீட்டாளரும் ஏனைய 49 சதவீததை வழங்கவுள்ளோம். அதிகமாகக் கேட்டால், அந்த முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப அதிக அல்லது சில தொகையைப் வழங்கவும் தீர்மானித்துள்ளோம்.

அதனால் இதற்கு தேவையான விலைமனுக்கள் கோர எதிர்பார்க்கிறோம். இதிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடனை செலுத்தி, முடிந்தவரை கடனில் இருந்து விடுபட முடியும் என நம்புகிறோம்´´ என குறிப்பிட்டார்.