சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும்: அமெரிக்க கடற்படை தலைவர் கில்டே தகவல்

312 0

தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என அமெரிக்க கடற்படை தலைவர் கில்டே தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என அமெரிக்க கடற்படை தலைவர் கில்டே தெரிவித்துள்ளார்.

திபெத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, தைவானையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தென்சீன கடல் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, விமானம் தாங்கி கப்பல்களை தயாரித்து வருவதுடன் ‘நீல நீர்கடற்படை’யையும் சீனா உருவாக்கி வருகிறது. மேலும், இலங்கைக்கு அனுப்பிய உளவு கப்பல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால்,கப்பலை வாபஸ் பெற்ற சீனா, தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் அதை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்க கடற்படை தலைவர் கில்டே, வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இந்தியா தொடர்பான கேள்விக்கு அளித்த பதிலில் கூறியதாவது:

பிற நாடுகளைவிட இந்தியாவுக்கு நான் அடிக்கடி பயணம் செய்துள்ளேன். ஏனென்றால், வரும் காலத்தில் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளியாக இந்தியா விளங்கும் என கருதுகிறேன்.

இமயமலைப் பகுதியில் (லடாக்) இந்தியா, சீனா இடையே எல்லை தொடர்பான மோதல் நிலவுகிறது. இதன்மூலம் சீனாவுக்கு இருமுனை பிரச்சினையாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, வரும் காலத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், இதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

4 நாடுகள் இணைந்து..

சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ அமைப்பை நிறுவி உள்ளன. குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் டோக்கியோவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை முன்னாள் உயர் அதிகாரி எல்பிரிட்ஜ் கால்பி கூறும்போது, “தைவான் விவகாரத்தில் நடைபெறும் உள்நாட்டுப் போரில்இந்தியா நேரடியாக பங்கேற்காது. ஆனால் இமயமலைப் பகுதியில்சீனாவின் கவனத்தை இந்தியாஈர்க்கும். இதற்காக தெற்கு ஆசியாவில் இந்தியா வலிமையுடன்இருக்க வேண்டும் என அமெரிக்காவும் ஜப்பானும் விரும்புகின்றன. அப்போதுதான் சீனாவுக்கு 2-வது முனை பிரச்சினையாக இந்தியா இருக்கும்” என்றார்.து வருவதுடன் ‘நீல நீர்கடற்படை’யையும் சீனா உருவாக்கி வருகிறது. மேலும், இலங்கைக்கு அனுப்பிய உளவு கப்பல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால்,கப்பலை வாபஸ் பெற்ற சீனா, தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் அதை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.