செங்கல்பட்டு மாவட்டம், வல்லம் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறை அப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை ௭ழுந்துள்ளது.
கற்குவைகள் என்பவை பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்னங்கள் ஆகும். அன்றைய காலத்து மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தை அடையாளம் காண்பதற்காக, பல குறியீடுகளை அமைத்திருந்தனர்.
அந்த வகையில் செங்கல்பட்டு அருகே வல்லம் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில், ஏராளமான குன்றுகள் உள்ளன. இந்த குன்றுகளில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை சுமார், 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பெருங்கற்கால அடையாளங்களாக உள்ளன. இவ்வூரில், தொல்லியல் துறை முறையாக அகழாய்வு மேற்கொண்டால், இப்பகுதியின் தொன்மை மற்றும் ஏராளமான புதிய தகவல்கள் வெளி உலகுக்கு தெரியவரும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.