உயிரியல் துறையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் தமிழ்வாணன் துவாரகேஸ் முதலாம் இடத்தினைப்பெற்றுள்ளார்!

121 0

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ், உயிரியல் துறையில் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் முதலாம் இடத்தினைப்பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சைகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த சாதனையினை படைத்துள்ளார்.

இன்று அவரது இல்லத்திற்கு வருகைதந்த கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோர் சாதனை படைத்த மாணவனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மருத்துவதுறையின் விஞ்ஞானியாக பல கண்டுபிடிப்புகளை செய்யவேண்டும் என்பதே தனது இலட்சியம் என சாதனை படைத்த மாணவனானா துவாரகேஸ் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கல்வியினை திட்டமிட்டு கற்கவேண்டும் எனவும் சரியான முறையினை தேர்வுசெய்து கற்கவேண்டும் எனவும் கஸ்டப்பட்டு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் எந்தவித பிரயோசனமும் இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்றார்.

வைத்திய நிபுணர் தமிழ்வாணன் – வைத்தியர் பகீரதி தம்பதியினரின் இரண்டாவது மகனான துவாரகேஸ் பாடசாலை மட்டம், மாகாண மட்டம், தேசிய மட்டங்களில் பல சாதனைகளைப்படைத்துள்ளார்.

இதேநேரம் இவரது இலத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கு.சுகுணனும் குடும்பத்துடன் வருகை தந்து மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.