பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வது தடைபடும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.
திறந்த கணக்கு முறையின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் அடுத்த மாதம் முதல் கிடைக்காவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் சந்தையில் பொருட்களின் விலை சற்று குறைந்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
திறந்த கணக்கு முறையானது இரண்டு மாதங்களுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அடுத்த மாதம் முதல் காலாவதியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனவே, திறந்த கணக்கு முறை நீடிக்கப்படாவிட்டால் பிரச்சினை ஏற்படும் என்றும் அதன் பின்னர் இறக்குமதி செய்வதற்கு போதுமான அந்நிய செலாவணி வங்கிகளிடம் இல்லை என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.