புத்தளம் ஸலாமாபாத் கிராமத்திற்குள் பயிர்களை நாசம் செய்த யானையை விரட்ட முற்பட்டபோது ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் 6ம் கட்டை ஸலாமாபாத் கிராமத்திற்குல் 27 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் காட்டு யானைகள் உற்புகுந்து தென்னை மரங்கள், வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளது.
இந்த நிலையில் கிராம மக்கள் கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் குறித்த யானைகளை விரட்டியுள்ள நிலையில் குறித்த காட்டு யானையை 27 ஆம் திகதி மாலை மீண்டும் கிராமத்திற்குள் உற்புகுந்த வேளையில் குறித்த யானைகளை விரட்டுவதற்கு முற்பட்டபோது அதில் ஒரு யானை ஒரு இளைஞரை யானை தாக்கியுள்ளது.
இதன்போது படுகாயங்களுக்குள்ளாகிய குறித்த இளஞ்ரை உடனடியாக அங்கிருந்தவர்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குறித்த இளைஞர் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த யானைகள் கிராமத்தை அண்டிய காட்டுப் பகுதிக்குள் மறைந்து நிற்பதாகவும் குறித்த காட்டு யானையை கிராம மக்கள் வனஜீவராசிகள் மற்றும் பொலிஸார் இனைந்து காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.
இதுவரைக் காலமாகவும் தமது கிராமத்திற்குள் இவ்வாறு காட்டு யானைகள் உள்நுழைந்ததில்லையெனவும் இதுவே முதல் தடவையென்றும் ஸலாமாபாத் கிராம மக்கள் தெரிவித்தனர்.