யுத்தத்திற்குப் பின்னர் சமூகத்தில் பெண் தலைமைக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சவால்களை மக்கள் திட்டம் ஒன்றியத்தின் பிரநிதிகளால் தேசிய மட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மக்கள் திட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் வடக்கில் மக்கள் திட்ட ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் கலந்துரையாடல் இடம்பெற்றது இதன்போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பெண் தலைமை குடும்பங்கள் அரசியல்வாதிகளை எதிர்பார்த்து காத்திருக்காமல் சுய தொழில் விவசாயம் போன்றவற்றில் தம்மை ஈடுபடுத்தி கொள்ளவும் அந் நடவடிக்கைகளுக்கு தமது பிரதிநிதிகள் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காகவே மக்கள் திட்ட ஒன்றியத்தை தேசிய வேலைத்திட்டமாக முன்னெடுப்பதற்குரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கையின் பலபகுதிகளுக்கும் சென்று இவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.