சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது கனமழை பெய்யும் என்பதால் அடுத்த மாதத்திற்குள் (செப்டம்பர்) மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக 15 மண்டலங்களிலும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் எந்தெந்த பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதோ அந்த பகுதிகளில் பெரிய அளவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. கே.கே.நகர், அடையார், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர். ஆகிய பகுதிகளில் இந்த வாரம் மட்டும் 10 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “1 மரம் வெட்டப்படும்போது 10 மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். சாய்ந்த நிலையில் உள்ள மரங்களை பாதுகாக்கும் விதமாக அதன் பக்கவாட்டு கிளைகளை மட்டும் வெட்டி வருகிறோம். மின் கம்பங்களில் உரசும் மரக்கிளைகளையும் அகற்றி மரங்களை பாதுகாத்து வருகிறோம். அந்த வகையில் மொத்தம் 1,500 மரங்களை ‘ட்ரிம்’ செய்துள்ளோம்” என்று கூறினார்.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024
தமிழர் வரலாறு
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள்
September 26, 2024 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2024
கட்டுரைகள்
-
5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
October 3, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த மதிப்பளித்து நிகழ்வு
November 22, 2024