ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்காக விசேட மாநாடு ஒன்றை நடத்த உள்ளார்.
சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் விசேட மாநாடு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் முக்கிய விடயங்கள் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளது.
சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல், அரசாங்கத்தின் பிரச்சினைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி செயலகம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.