எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச நாட்டை விட்டு வெளியேறியதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை எரித்த சம்பவத்தின் போது அவர் அங்கு இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே சஜித் பிரேமதாசவின் சகோதரி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் அரசுக்கு எதிராக இடம் பெற்ற போராட்டத்தின் போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.