நெல் சந்தைப்படுத்தல் சபை அதிக விலைக்கு கொள்வனவு செய்தால் அரிசியின் விலை இரட்டிப்பாகும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் அமைச்சரிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அரிசி விலையை குறைக்காவிட்டால், அரிசி விலையை பராமரிப்பது கடினம் என்றும், சந்தைப்படுத்தல் சபை அதிக விலைக்கு கொள்வனவு செய்தால், அரிசி விலை இரு மடங்காக உயரும் என்றும் பெரும்பான்மையான ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபை கிலோ நாடு ரூ.120 , கிலோ சம்பா ரூ.125 , கிலோ கீரி சம்பா 130 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்கிறது.
அதை விட குறைந்த விலைக்கு தனியார் நெல் கொள்வனவு செய்கின்றனர்.