ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 நாடுகள் மீது பயண தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்ட பின்னர் இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தில் அவர் பேசுவதற்கு கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது.
இங்கிலாந்து வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ராணி இரண்டாம் எலிசபெத் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது இங்கிலாந்து வருகையின்போது அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் பேசுவார் என தகவல்கள் வெளியாகின.
ஆனால் ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 நாடுகள் மீது பயண தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்ட பின்னர் இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தில் அவர் பேசுவதற்கு கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது.
பாராளுமன்ற கீழ்சபை சபாநாயகர் ஜான் பெர்கவ்வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாராளுமன்ற கூட்டம் நடைபெறாத காலகட்டத்தில் டிரம்ப் வருகை இருக்குமாறு பார்த்துக்கொள்வது என இங்கிலாந்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் பயணம் குறித்து பக்கிங்காம் அரண்மனை மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் விவாதித்து கொண்டிருக்கின்றனர். ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில், பாராளுமன்ற கூட்டம் நடைபெறாது கோடை விடுமுறை விடப்பட்டிருக்கும் காலத்தில் டிரம்ப் பயணம் இருக்குமாறு திட்டம் வகுக்கப்படுகிறது. இதனால் அவர் பாராளுமன்றத்தில் பேசும் வாய்ப்பு இருக்காது என தெரியவந்துள்ளது.