எதிரி ஏவுகனைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

299 0

எதிரி ஏவுகனைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை ஒடிசா கடற்கரை பகுதியில் வெற்றிரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிசாவின் பாலசோரில் இருந்து இடைமறித்து தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா  மாநிலத்தில் வங்கக்கடலை ஒட்டியுள்ள அப்துல்கலாம் தீவு (வீலர் தீவில்) எதிரி நாட்டின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும்  ஏவுகணை நேற்று காலை சுமார் 7.45 மணிக்கு விண்ணில் ஏவி சோதிக்கப்பட்டது.

தானியங்கி முறையில் செயல்படும் இந்த ஏவுகணை ரேடார் மூலம் கண்டறியப்பட்டு எதிரி ஏவுகணைகளை தாக்கும்  வல்லமையுடையது. எதிரி நாட்டு ஏவுகணை நம் எல்லைக்குள் நுழைவதை நெட்வொர்க் மூலம் அறிந்து தாக்கும்.

இதுவரை 3 முதல் 4 நாடுகளே இந்த சோதனையை வெற்றிகரமாக சோதித்திருக்கும் நிலையில், இந்தியாவும் இந்த  சோதனையை வெற்றிகரமாக சோதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.