ஓ.பன்னீர் செல்வத்தின் பக்கம் மேலும் ஒரு எம்.பி

382 0
தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், நிலையான ஆட்சி அமைய முறையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பலதரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சசிகலா – பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சசிகலா தனக்கு 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்று கூறி ஆட்சியமைக்க கோரும்படி ஆளுநரை வலியுறுத்தி வருகிறார்.
சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க தயார் என்று பன்னீர் செல்வம் கூறி வருகிறார்.
பன்னீர் செல்வத்திற்கு ஒவ்வொருவராக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு அ.தி.மு.க. எம்.பி்.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்றிரவு 9 மணியளவில் திருவண்ணாமலை தொகுதி எம்.பி வனரோஜா, முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இவருடன் இன்று மட்டும் 4 எம்.பி.க்கள் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால், ஓ.பன்னீர் செல்வத்தின் அணியில் உள்ள எம்.பி-க்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.