தென் அமெரிக்க நாடான சிலியில் வேலை நேரத்தை வாரத்துக்கு 40 மணி நேரமாக குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிபர் இறங்கியுள்ளார்.
சிலி அதிபர் கேப்ரியல் போரிக்கின் தேர்தல் வாக்குறுதிகளில், வேலை நேர குறைப்பு என்பது முக்கிய அம்சமாகவே இருந்தது. அதன் பொருட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியில் சிலியின் அதிபர் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், வாரத்துக்கு வேலை நேரத்தை 40 மணி முதல் 45 மணி நேரமாக குறைக்கும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று சிலி அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிலி அதிபர் கேப்ரியல் போரிக் கூறும்போது, “இந்த மேம்பாடுகள் புதிய சிலி உருவாக அவசியமானவை. மசோதா விரைவில் இரண்டு அவைகளிலும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள், வீட்டுப் பணியாளர்களும் இந்த வேலைக் குறைப்பில் பங்கு கொள்வார்களா, மசோதாவில் என்னென்ன திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் உள்ள எம்பிக்கள் கூடி முடிவெடுப்பார்கள் எனவும் போரிக் தெரிவித்திருக்கிறார்.