பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காக நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் கல்வி கற்கும் 17 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (26) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
15 வயதுக்குற்பட்ட 8 மாணவர்களும் 15 வயதுற்கு மேற்பட்ட 9 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியரொருவர் தெரிவித்தார்.
குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்களுக்கு தொடர்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.