தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்த முடிவை எடுக்க முடியாமல் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருந்து வருகிறார்.
இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா, ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.
இதற்கிடையே பா.ஜனதாவின் மேல்சபை எம்.பி.யும், அந்த கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணிய சுவாமி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.
இந்நிலையில் சுமார் 6.30 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி ஆளுநரை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது தற்போதைய தமிழக அரசியலில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.