இன்று நாடளாவிய ரீதியில் 3 மணி நேர மின்வெட்டு அமுல் !

120 0

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3 மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு பகலில் 1 ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

மேலும், சிசி பிரிவுகளில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எம், என், ஓ, எக்ஸ், வை, இசட் ஆகிய மண்டலங்களுக்கு காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.