வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்க செல்பவர்களுக்கான அறிவித்தல் !

110 0

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது குடும்பப் பின்னணி அறிக்கையை வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்திற்கு ஜூன் 27ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதன்படி, புதிய திருத்தங்களின் பிரகாரம், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிப்பதில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.

மேலும், 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டுப் பயணத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்விக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கிராம அலுவலர் அல்லது பிரதேச செயலர் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும் புதிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை நேற்று முதல் அமுலுக்கு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.