13ஆண்டுகளுக்குப் பின் சிறீலங்காவுக்கு பயணமாகும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்

507 0

minister-of-foreign-affairs-stephane-dion-as-the-liberal-govகனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இம்மாத இறுதியில் சிறீலங்காவுக்கு 3 நாள் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 13 வருடங்களுக்குப் பின்னர் சிறீலங்காவுக்குப் பயணம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் இந்தப் பயணத்தின்போது சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு ஆளுநர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், அரசியலமைப்பு திருத்தம், நல்லிணக்கம், மீள்குடியமர்வு ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிகாரிகளையும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.

அத்துடன், கனடாவின் நிதியுதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றல் மற்றும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்களையும் அவர் நேரில் பார்வையிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.