உச்சத்தை தொட்ட காணி விலைகள்

147 0

கொழும்பு மாவட்டத்தின் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் முதலாமரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு 17.0 சதவீத மாற்றத்தினால் 186.9 ஆக அதிகரித்தது.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் ஆண்டு அதிகரிப்பும் (17.0) அரையாண்டு அதிகரிப்பும் (4.6 சதவீதம்) 2021இன் அரையாண்டுப் பகுதியில் அவதானிக்கப்பட்ட அதிகரித்த போக்கின் வீழ்ச்சியைக் காண்பித்தன.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிடக் காணி விலைமதிப்பீட்டு குறிகாட்டி, வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி ஆகிய அனைத்தும் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன.

கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி 20.6 சதவீதம் கொண்ட அதிகூடிய ஆண்டு அதிகரிப்பினைப் பதிவுசெய்து, அதனைத் தொடர்ந்து வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் காணப்பட்டன.