புத்தளம் சிலாபத்திலிருந்து கற்பிட்டி பகுதிக்கு அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமாக பெற்றோலை லொறியொன்றில் கொண்டு செல்ல முற்பட்ட இருவர் தம்பபண்ணி உடப்பு கடற்படையினரால் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபத்திலிருந்து மதுரங்குளி தழுவ உள்வீதியினூடாக கற்பிட்டிக்கு பெற்றோலை அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக கடற்படைப் பிரிவினருக்கு இரகசியத் தகவலுக்கமைய கிடைக்கெப்பெற்றது.
இதனையடுத்து கடற்படைப் பிரிவினர் தழுவ கடற்படை முகாமிற்கு முன்னாலுள்ள சோதனைச் சாவடியில் வைத்து குறித்த லொறியை நிறுத்தி சோதனைக்கு உற்படுத்தியுள்ளனர்.
இதன்போது, 1,429 லீற்றர் பெற்றோல் கைப்பற்றபட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்களென கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் பெற்றோல் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய லொறி ஆகியவை மேலதிக நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதக இதன்போது தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.