ஓ.பன்னீர்செல்வத்திற்கு அகில இந்திய தேசிய லீக் ஆதரவு

295 0

ஓ.பன்னீர்செல்வத்திற்கு அகில இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு விரும்பதாக சம்பவங்கள் தமிழக அரசியலில் அரங்கேறி வருகிறது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அதனை  திறம்பட செயல்படுத்தி அதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்ற தலைவராக விளங்கினார். அவரின் மறைவு அனைந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமின்றி, தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.

இந்நிலையில் மறைந்த முதல்வருக்கு சோதனை ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் இருமுறை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை  ஜெயலலிதா அடையாளம் காட்டினார். தன்னுடைய நம்பிக்கையின் பாத்திரமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு கட்சியிலும்,  ஆட்சியிலும் தொடர்ந்து முக்கியத்துவத்தை ஜெயலலிதா அளித்து வந்தது அனைவரும் அறிந்த விஷயம்.

டிச.5-ம் தேதி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்ட ஓ.பன்னீர்செல்வம் அதன் பிறகு  தமிழகத்தில் நிகழ்ந்த வர்தா புயல் பாதிப்புகளை திறம்பட பணிகளை மேற்கொண்டார். அதே போல் சென்னை நகரின் குடிநீரை  பஞ்சத்தை போக்க ஆந்திர சென்று அங்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து கிருஷ்ணா நீரை பெற்று வந்தார்.

உலகமே பார்த்து வியந்த ஜல்லிக்கட்டு மாணவர் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு கைவிரித்த போதிலும்  இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் அவசர சட்டம் கொண்டு வந்து, தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில்  நடைபெற வழிவகை செய்துள்ளார்.

இப்படி பல்வேறு விவகாரங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி ஆட்சியை நடத்திய  ஓ.பன்னீர்செல்வத்திற்கு அகில இந்திய தேசிய லீக் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு, அதிமுக சட்டமன்ற  உறுப்பினர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டும் என அகில இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கேட்டுக்  கொள்வதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.