தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்கப் போவதாக ஆகஸ்ட் 11ல் உறுதிமொழி எடுத்தார். தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் நிறுவனம் ஆகஸ்ட் 14-ம் தேதி ஒரே நாளில் 274 கோடி ரூபாய்க்கு மது பானங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால் எங்களை வியக்க வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.