கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை சீனா விரைவாக குறிப்பிட வேண்டும்

120 0

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா சாதகமான நிலைப்பாட்டை விரைவாக குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். சீனா இலங்கையின் நம்பிக்கையான நட்பு நாடாகும் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செவ்வாய்க்கிழமை (16) வருகை தந்த யுவான் வான் -05 கண்காணிப்பு கப்பலை வரவேற்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுவான் வான் -05 கப்பலின் கேப்டன்; மற்றும் அக்கப்பலின் சேவையாளர்கள் ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் அன்புடன் வரவேற்கிறோம்.இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவு இந்த கப்பலின் வருகையுடன் பலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை என்றுமில்லாதவாறு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது.

பொருளாதார மீட்சிக்கு இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா சாதகமான நிலைப்பாட்டை விரைவாக குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இலங்கை,இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குகிடையிலான பிளவுப்படாத உறவை மேற்குலக நாடுகள் விளங்கிக்கொள்ளாது.இந்த மூன்று நாடுகளுக்குமிடையில் புத்த மதம்,வர்த்தகம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக நட்புறவு காணப்படுகிறது.

வலய நாடுகள் அனைத்தும் ஒருமித்த நிலையில் செயற்பட்டால் ஆசியாவின் பலமிக்க தரப்பினராக வலு பெறலாம்.சீனா இலங்கையின் நம்பிக்கையான நெருங்கிய நட்டு நாடாகும் என்றார்.