சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது – ஆளுநர் அறிக்கையில் தகவல்

283 0

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள், காவல்துறை அளித்த தகவலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில், அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

அதனால், விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்களாக, அல்லது சுய விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளார்களாக என்பது குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளதை தனது அறிக்கையில் சுட்டிக் காட்டி கொஞ்சம் பொறுத்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.