தமிழக அரசியல் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை – ஆளுநர் மாளிகை

273 0

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழக நிலைமை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது.

அந்த அறிக்கையில், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளாதாக கூறப்பட்டது.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளதை தனது அறிக்கையில் சுட்டிக் காட்டி கொஞ்சம் பொறுத்திருக்கலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியாகிய நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை செய்தித்தொடர்பாளர் ஆளுநர் எந்தவித தகவலையும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.