அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதனடிப்படையில் நீதிமன்ற விவகாரங்களில் நீதித்துறையுடன் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் நேரடி கடிதப் பரிமாற்றங்களில் ஈடுபடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதம நீதியரசர் உட்பட உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிச் சேவை ஆணைக்குழு அல்லது நீதித்துறை அதிகாரிகளுக்கு நேரடி கடிதப் பரிமாற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.