நியூ கலிடோனியாவில் உள்ள நவுமியாவில் இன்று திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நவுமியா நகருக்கு கிழக்கே 477 கி.மீ. தொலைவில் 170 கி.மீ. ஆழத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.