போலித் தடுப்பூசி அட்டைகளை விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நியூயோர்க் தாதிகள்!

169 0

அமெ­ரிக்­காவின் நியூ யோர்க் மாநி­லத்தில் போலி­யான கொவிட் 19 தடுப்­பூசி அட்­டை­களை விற்­பனை செய்த குற்றச்சாட்டில் தாதி­யர்கள் இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன், பெரும் எண்­ணிக்­கை­யான ஆசி­ரி­யர்கள் பலர் இத்தடுப்­பூசி அட்­டை­களை அதி­கா­ரி­க­ளிடம் சமர்ப்­பித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளனர்.

தாதி­க­ளான ஜூலி டெவு­வோனா (49), மரிசா உராரோ ஆகியோர் போலி தடுப்­பூசி அட்டை விற்­பனை மூலம் 15 லட்சம் டொலர்­க­ளுக்கு அதி­க­மான பணத்தை பெற்­றுள்­ள­தாக குற்­றம்­சு­மத்­தப்­பட்­டுள்­ளது. இத்­தா­திகள் அடங்­கிய குழு­வொன்று சிறு­வர்­க­ளுக்கு போலி தடுப்­பூசி அட்டை வழங்­கு­வ­தற்­காக தலா 85 டொலர்­க­ளையும் வளர்ந்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து தலா 220 டொலர்­களை வசூ­லித்­த­தா­கவும் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இத்­தா­தி­யர்­களை நியூயோர்க் பொலிஸார் கைது செய்­த­துடன், ஜூலி டெவு­வோ­னாவின் வீட்­டி­லி­ருந்து 9 லட்சம் டொலர் பணத்­தையும் கைப்­பற்­றி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இதே­வேளை, தாம் கொவிட் -19 தடுப்­பூசி செலுத்­திக்­கொண்­ட­தாக போலி­யான சான்­றி­தழ்­களை அதி­கா­ரி­க­ளிடம் சமர்ப்­பித்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் 82 ஆசி­ரி­யர்­களை விசா­ரணை முடியும் வரை மீண்டும் பணியில் இணைத்­துக்­கொள்­வ­தற்கு நியூயோர்க் கல்வித் திணைக்­களம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.

கொவிட்19 தடுப்­பூசி செலுத்­திக்­கொள்­ளாத ஊழி­யர்கள் பணி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டுவர் என நியூயோர்க் கல்வித் திணைக்களம் தெரி­வித்­தி­ருந்­தது. சுமார் 1000 பேர் இவ்­வாறு பணி நீக்கம் செய்­யப்­பட்­டனர்.

மேற்­படி தாதி­யர்­களின் போலி தடுப்­பூசி அட்டை விவ­கா­ரத்தில் பெயர்கள் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்ட 82 ஆசி­ரி­யர்கள் கடந்த ஏப்ரல் இறு­தியில் சம்­ப­ள­மற்ற விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டனர்.  இவர்­களை, தொடர்ந்தும் இடை­நி­றுத்தி வைப்­ப­தற்­கான மனு­வொன்றை நியூயோர்க் கல்வித் திணைக்­களம் தாக்கல் செய்­தது. எனினும், ஆசி­ரி­யர்கள் மீதான குற்­றச்­சாட்டு நிரூபிக்­கப்­ப­டாத நிலையில் தொடர்ந்தும் அவர்­களை விலக்கி வைப்­ப­து­பொ­ருத்­த­மல்ல என ஆசி­ரி­யர்­களின் தொழிற்சங்கம் வாதாடியது.

இந்நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரை அவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நியூ யோர்க் கல்வித் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.