தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் புதன்கிழமை(10) மன்னார் பொலிஸ் ஊடாக குறித்த அழைப்புக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விசனம்
ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விசாரணை என்கிற போர்வையில் அச்சுறுத்தும் செயற்பாட்டில் அரசு முன்னெடுத்து வருகின்றமை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விசாரணை என்கிற போர்வையில் அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றமை சமூக ரீதியில் விசனத்தை ஏற்படுத்தும் செயல்பாடாக உள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.