நிரந்தர வேலிகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்படும் படைமுகாங்கள் வலி.வடக்கு பாதுகாப்பு எல்லைகளின் மும்முரம் (படங்கள் இணைப்பு)

532 0

K800_DSC_0587வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலைய எல்லைகளில் உள்ள படைமுகாங்கள் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்காலிகமாக போடப்பட்டிருந்த உயர்பாதுகாப்பு வலைய எல்லை வேலிகளும் நிரந்தரமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலைய எல்லைகளே பலப்படுத்தும் நடவடிக்கைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
இப் படைமுகாங்களுக்கு முன்னால் உள்ள வீதிகளில் நெருக்கமான வேகத்தடைகளi இராணுவம் அமைத்தும் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுவதால் அங்கு மீள்குடியேறச் செல்லும் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதிகளை உள்ளடக்கிய 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தன.
குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் மீள்குடியேறிக் கொள்வதற்காக அங்கு செல்லும் மக்கள் தமது காணிகளை இனங்கண்டு துப்பரவு செய்யும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் உயர்பாதுகாப்பு வலை எல்லைகளில் உள்ள பொது மக்களின் வீடுகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினல் பெரும்பாலும் அங்கிருந்து விலகிச் செல்லுகின்றனர். இது ஒருபுறம் இருக்க உயர்பாதுகாப்பு வலை எல்லைகளுடன் உள்ள படைமுகாங்களை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளும் இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எல்லைகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த உயர்பாதுகாப்பு வலைய வேலிகள் அப்படியே இருக்கின்ற நிலையில். அவ்வேலிகளுடன் சேர்த்து சீமெந்து தூண்கள் கொண்டு பாதுகாப்பு வலைய வேலிகளை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச் செயற்பாடானது குரும்பசிட்டிப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிரந்தர வேலிகள் அமைப்பதற்கான முன்னேற்பாடாக உயர்பாதுகாப்பு வலைய எல்லைகளில் சீமெந்து தூண்கள் இராணுவத்தினர் கொண்டுவந்த சேர்க்கின்றார்கள்.
ஒரு தொகுதி இராணுவத்தினர் சீமெந்து தூண்களை எல்லைகளுடன் போட்டுச் செல்ல, மற்றுமொரு தொகுதி இராணுவத்தினர் மிக வேகமாக உயர்பாதுகாப்பு வலைய எல்லை வேலியை நிரந்தரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இது ஒரு புறம் இருக்கையில் உயர்பாதுகாப்பு வலைய எல்லைகளில் பலப்படுத்தப்படும் படைமுகங்களுக்கு முன்பாக உள்ள வீதிகளில் வேகத்தடைகளை நெருக்கமாக அமைக்கும் நடவடிக்கையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
சுமார் 20 மீற்றர் துரத்திற்கு ஒரு வேகத்தடைகள் வீதம் படைமுகாங்கள் அமைந்துள்ள வீதிகளில் போடப்படுகின்றது.
குறிப்பாக இறுதியில் விடுவிக்கப்பட்ட வல்லை – அராலி வீதியில் உள்ள 600 மீற்றர் தூரத்தில் இவ்வாறான வேகத்தடைகள் அதிகம் போடப்பட்டுள்ளது.
முன்னர் இவ்வீதிக்குப் பதிலாக பொது மகன் ஒருவருடைய காணியினை ஊடறுத்து இராணுவத்தினர் வீதி அமைத்திருந்தனர். இதன் பின்னர் ஏற்படுத்தப்பட் அழுத்தம் காரணமாக வல்லை – அராலி வீதியினை இராணுவம் விடுவித்துள்ளது.
இருந்த போதும் அவ்வீதியில் இவ்வாறு நெருக்கமான வேகத்தடைகள் போடப்பட்டுள்ளதால் பொது மக்கள் பெரும்பாலும் பொது மகனின் காணியை ஊடறுத்து அமைக்கப்பட்ட புதிய வீதியினையே பயன்படுத்துகின்றார்கள்.
இதன் மூலம் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்ட வீதியினை மீண்டும் இராணுவ வலயத்திற்குள் கொண்டு செல்வதற்கான மறைமுகமான முயட்சியே இவ்வீதித்தடைகளை இராணுவம் அமைத்து வருகின்றது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

K800_DSC_0596 K800_DSC_0597 K800_DSC_0613