கடந்த சில நாட்களாக அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டு, மாட்டிறைச்சி விற்பனையாளர்களுடனான சந்திப்பொன்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சகி தலைமையில் மாநகர சபையில் இடம்பெற்றது.
இதில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த குற்றச்சாட்டை விற்பனையாளர்கள் முற்றாக மறுத்தனர்.
மேலும் , ஒரு கிலோ இறைச்சி (இறைச்சி 800g+முள்ளு 200g]) 1600/- ரூபாய்க்கும் , தனி இறைச்சி 1800/- ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்வதாகவும் உறுதியாக கூறினர்.
இருந்தாலும் , ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்க வாய்பிருக்கலாம் என்பதையும், பொருளாதார நெருக்கடி நிலையையும் கருத்தில் கொண்டு மாநகர மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் மாநகர சபை இவ்விடயத்தில் மிகவும் கண்காணிப்புடன் நடந்து கொள்ளும் என்பதை மாநகர மக்களுக்கு அறிய தருகின்றது.
அவ்வாறு ,கூடிய விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதை அறிந்தால் 067 22 77 275 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம் என அக்கரைப்பற்று மாநகர சபை மக்களை அறிவுறுத்தியுள்ளது.