இராணுவத்தில், புதிய படை அணி (ஸ்குவாட்ரன்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி விவகாரங்களைக் கையாள்வதற்காக இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.
பேரழிவு இரசாயன அவசரநிலைகளை சமாளிக்கும் நோக்கில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவினால் இந்தப் புதிய படைப் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக லெப்.கேணல் ரி.டி.பி.சிறிவர்த்தனவும், பிரதி கட்டளை அதிகாரியாக மேஜர் ஏ.யு.ஹிடெல்லாராச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் 14 ஆவது பற்றாலியனின் ஒரு அங்கமாக இந்த ஸ்குவாட்ரன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்குவாட்ரனைச் சேர்ந்த படையினர், தாஜ் சமுத்ரா விடுதியில் கடந்த ஆறாம் திகதி ஆரம்பமாகி, இன்று வரை இடம்பெறும், இரசாயன ஆயுதங்கள் தொடர்பான பயிற்சி நெறி ஒன்றில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.