2 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் : 23 பேர் உயிரிழப்பு

116 0

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில்  இடம் பெற்ற 21 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தல்துவ இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 துப்பாக்கிச்  சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன . இதன்போது துப்பாக்கி சூட்டுக்கு இழக்காகி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் இந்த துப்பாக்கிப்  பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது துப்பாக்கிசூட்டுக்கு  இழக்காகி உயிரிழந்தவர்கள் அதனுடன் தொடர்புடையவர்களாவர்.

மேலும், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கலின் பின்னணியில்  இந்த துப்பாக்கி பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதுவரையில் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும்,  இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பொலிஸ் தலைமையகம் ஊடாக அனைத்து மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.