தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை

311 0

தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

குடியரசு தலைவர், பிரதமர், மற்றும் உள்துறை அமைச்சகம் என்பவற்றிட்கு இவ்வாறு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்ச் செல்வம் மற்றும் சசிக்கலா ஆகியேருடன் இடம்பெற்ற சந்திப்புகள் குறித்த விபரத்தை ஆளுநர் அறிவித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.