சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் பன்னீர் செல்வம் தலைமையிலான அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பு லட்சுமி, ”பன்னீர் செல்வத்திற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி, எவ்வித பிரதிபலனும் இன்றி திமுக ஆதரவு அளிக்கும்.
இது தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை சட்டசபையில் துரைமுருகன் தெளிவுபடுத்தி உள்ளார். தளபதியும் தெளிவுபடுத்தி இருக்கிறார்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து சத்தியமங்கலத்தில் காலையில் தான் கூறிய கருத்துக்களை சுப்புலட்சுமி மறுத்துள்ளார். மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் சுப்பு லட்சுமி கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாக கூறினார்.