ஆளுநரை சந்திக்கும் முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் சசிகலா

297 0

அதிமுக அவைத் தலைவர் மது சூதனன் தலைமையில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமது ஆதரவாளர்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை மாலை 5 மணியளவில் சந்தித்தார்.

இதனையடுத்து, இரவு 7.30 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா 10 எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநரை சந்தித்தார்.

இதனிடையே, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கும் முன்பு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் தொட்டு கும்பிட்டு மலர்கள் அள்ளி தூவினார்.

ஆட்சி அமைக்க கோரும் எம்.எல்.ஏக்கள் கடிதத்தை நினைவிடத்தில் வைத்து வணங்கினார்.

சசிகலா வருகையையொட்டி மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்து இருந்தனர். மெரினாவில் குவிந்து இருந்த அதிமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு சசிகலா சென்றார். முன்னதாக, போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.