அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தனர்.
பின்னர், பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதிமுக தொண்டர்களையும் பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் சந்தித்தனர்.
அப்போது, அவைத் தலைவர் மதுசூதனன்சசிகலாவை நான் தான் ஆதரித்தேன். சசிகலா கட்சியை நடத்துவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் குடும்பமே கட்சியை நடத்துகிறது.
பொருளாளராக இருந்த பன்னீர் செல்வத்துக்கு சில அவமானங்கள் இழைக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். பொருளாளருக்கே அவமானம் என்றால், நாளைக்கும் நமக்கும் அதே நிலை நடக்கும் என்று நினைத்தேன். கட்சியை காப்பற்றனும், குடும்பத்தை அல்ல. கட்சிக்காக தான் வாழ்கிறோம்.
நியாயம் நடக்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பொறுந்திருந்து பாருங்கள் என தெரிவித்தார்.